Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கான அவசரகால நடவடிக்கைகள் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனாவிற்கான அவரசகால நடவடிக்கைகளை மேலும் நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிரிட்டனில் கொரோனா பாதிப்பிற்கான துரித நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் அளித்துள்ளது. மேலும் அவசரகால அதிகாரங்களை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க House of Commons ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்த அரசின் திட்டங்களையும் அங்கீகரித்துள்ளனர்.

எனினும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கைக்கு அவருடைய கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுவதாவது, இந்த தீர்மானத்தினால் ஏற்படும் நன்மைகளை விட நாட்டினுடைய பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மக்களின் செலவுகள் தான் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

அதாவது கொரோனாவிற்கான அவசர கால கட்டுப்பாடுகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் நாட்டில் போராட்டங்களுக்கு தடை விதித்தல்,  வியாபாரத்தை நிறுத்துதல், பயணத்தை கட்டுப்படுத்துதல், கொரோனா பாதிப்படையக்கூடிய நிலையில் உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |