Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவின் 2 ஆவது அலை…. அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்…. தேனியில் வெறிச்சோடிய வீதிகள்….!!

தேனியில் கொரோனாவினுடைய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் அங்கிருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதில் ஒன்றாக காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் பகல் 12 மணியளவு மட்டும்தான் இயங்கவேண்டும் என்றது. மேலும் அந்த கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடையை விதித்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் முக்கிய நகரங்களில் அமைந்திருக்கும் கடைவீதிகளில் மருந்து கடை, மளிகை கடை மற்றும் காய்கறி கடையை தவிர இதர கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |