Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம்…. தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களிடம் அதிக பதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். ஆனாலும் வைரஸ் உருமாற்றமடைந்து அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40. 34 கோடியாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச சுகாதார அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பியவை சேர்ந்த சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “உலக மக்கள் தொகையில் 50%பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறோம். சர்வதேச அளவில் நோய் எதிர்ப்பு பெறுவதற்கான பிரச்சாரம் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுவரை ஐரோப்பியா 165 நாடுகளுக்கு 120 கோடிக்கும் கூடுதலான  தடுப்பூசி டொஸ்களை வழங்கி உதவி செய்து உள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |