Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரத்தாண்டவம்…. ஒரே ஆம்புலன்ஸில் பொட்டலம் போட்டு 22 சடலங்கள்…. பதறவைக்கும் புகைப்படக் காட்சி….!!

கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் புகைப்படக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பலியான 22 நபரின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் புகைப்படக் காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. இந்தப் புகைப்படங்களை இறந்தவர்களின் உறவினர்கள் வெளியிடவே இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து இந்த புகைப்பட காட்சியை வெளியிட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் ஒரே ஆம்புலன்சில் இந்த சடலங்களை கொண்டு செல்லப்பட்டது என்றும் அதில் 22 பேர் கடந்த சனிக்கிழமையும் 14 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தனர் எனவும் தெரிவித்தனர்.

Categories

Tech |