Categories
உலக செய்திகள்

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம்… மீட்டெடுக்க இப்படி ஒரு திட்டமா…? மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே சுற்றுலா பயணிகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் கிரீஸ் போன்ற போன்ற நாடுகளுக்கு இடையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய சுற்றுலா ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஜெருசலேமில் கடந்த திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கிரேக்க பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸ் போன்றோர் அறிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தமானது தடுப்பூசிகளுக்கான சான்றிதழ்கள் பெற்ற சுற்றுலா பயணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையில் எந்த தடைகளும் இன்றி, சுய தனிமைப்படுத்தல் போன்ற எந்த நடவடிக்கைகளுமின்றி பயணிப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு நாடுகளின் பெரும்பான்மையான பொருளாதாரமும் சுற்றுலா பயணிகளை நம்பியிருப்பதால் கடந்த ஒரு வருடமாக கொரோனாவால் பொருளாதாரம் பின்தங்கியுள்ளது.

இதனால் இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் உலகிலுள்ள பிற நாடுகளில் பயணத்திற்கான புதிய கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |