Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி…. ஆத்திரமடைந்த உறவினர்கள் செய்த செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனாவால் இறந்தவரின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் சகுந்தலா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதார பணியாளர்கள் சகுந்தலாவினுடைய சடலத்தை ஆம்புலன்சில் மருத்துவமனையிலிருந்து ஏற்றி வந்து அவருடைய சொந்த ஊரிலிருக்கும் மயானத்தில் வைத்துவிட்டு, அவரை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் கிளம்பிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலாவின் உறவினர்கள் செய்யாறு போகும் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதன் பின்னர் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக அவருடைய உடலை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Categories

Tech |