இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது.
அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 27வது நாளாக 2ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் இன்று முதல் மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா பரவி வரும் பகுதிகளின் விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
1. மத்திய பிரதேசம் – இந்தூர்
2. மகாராஷ்டிரா – மும்பை, புனே
3. ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்
4. மேற்குவங்கம் – கொல்கத்தா, ஹவுரா, மெடினிபூர் கிழக்கு, 24 பர்கானாஸ் வடக்கு, டார்ஜிலிங், கலிம்பொங் & ஜல்பைகுரி.