கொரிலாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டனில் உள்ள பிராங்கிளின் உயிரியல் பூங்காவில் கிகி என்ற கொரில்லா ஆண் கொரில்லா குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குட்டி பிறக்க குறிப்பிட்ட தேதிக்கு முன்பே தாய்க்கு கொரில்லாவிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குட்டி கொரில்லா வெளியில் எடுக்கப்பட்டது. சாதாரணமாக மூன்று முதல் ஐந்து பவுண்டுகள் வரை கொரில்லா குட்டிகளின் எடை இருக்கும்.
ஆனால் இந்த குட்டியின் எடை 6 பவுண்டுகள் மற்றும் 3 அவுன்ஸ் இருந்தது அதாவது இரண்டு கிலோ 700 கிராம் எடையில் இந்த குட்டி இருந்தது. கொரில்லாவை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள் பார்வையாளர்கள் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது தாய் கொரில்லாவும் குட்டியும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றன.