Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த எஸ்.கே”….. விளாசும் நெட்டிசன்ஸ்…..!!!!!

பள்ளி நிகழ்ச்சியில் கொரிய மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்த சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் சூரியை அப்பாவாக சிவகார்த்திகேயன் நடிக்க வைப்பார். கல்லூரிக்கு வரும் சூரியும் சிவகார்த்திகேயனும் தமிழை கொரிய மொழி போல் பேசுவார்கள். இத்திரைப்படம் வெளியான பொழுது கொரிய மொழியை கிண்டல் செய்வதுபோல ஏன் பேச வேண்டும் என விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பள்ளி விழா ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர் கொரிய மொழி மற்றும் மக்கள் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் எப்பொழுது கொரிய படம் பார்த்தாலும் அதில் நடிப்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் தெரிகின்றார்கள். எது ஹீரோ? எது ஹீரோயின்? என்றே தெரியவில்லை. இப்பவும் கொரியன் என்றால் டான் படத்தில் நானும் சூரியும் பேசிய கொரியன் தான் எனக்கு ஞாபகம் வருகின்றது. அது கொரியன் இல்லை. கொரியாவில் பார்த்தால் டென்ஷன் ஆகிவிடுவாங்க என பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கூறியுள்ளதாவது, ஒரு பிரபலம் அதுவும் பள்ளி குழந்தைகள் முன்பாக இப்படி அடுத்த மொழி மற்றும் மக்களை கிண்டல் செய்வது தவறு. சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா? காமெடி செய்கின்ற பெயரில் அடுத்தவர்களை இழிவுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார்கள்.

Categories

Tech |