புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று போலீசாரின் தடையை மீறி மெரினா கடற்கரைக்கு சென்ற பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
அதனைப்போலவே காசிமேடு மற்றும் எண்ணூர் ஆகிய கடற்கரை பகுதிகளும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.