கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு உணவை எடுக்கும் பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாம் கையில் சுடு தண்ணீர் பட்டாலே வலி தாங்க முடியாமல் அலறி விடுவோம். அதோடு தண்ணீர் பட்ட இடம் கொப்பளித்து விடும். ஆனால் கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட்டு பொரிந்து கொண்டிருக்கும் உணவை எடுப்பது என்பது பெண்ணொருவருக்கு சாதாரணமான ஒன்றாக உள்ளது. நமக்கு அசாதாரணமான அந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
டிக் டாக் வீடியோவாக இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. அதோடு அதில் அவர் தோற்பவர்களுக்கு தான் இடுக்கி தேவை என்று கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த காணொளியை பார்த்து வியந்துள்ளனர். 13 நொடிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள இந்த காணொளியில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து பெண்ணொருவர் பொரித்த உணவுகளை எடுக்கிறார். ஆனால் அவரது கைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
She said tongs are for losers 😭😭😭 pic.twitter.com/QF4IaFiMd7
— First We Feast (@firstwefeast) October 26, 2020