Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையிலும் களத்தில் மாநகராட்சிப் பணியாளர்கள் ….!!

சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் எதிரொலியால் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவற்றியூர் மேற்கு குடியிருப்பு பகுதிகளான ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்துள்ளன. இது குறித்து வந்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அவர்களுடன் அதிமுக நிர்வாகிகளும் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

Categories

Tech |