Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கன மழை… சாலையில் தேங்கி ஓடும் மழைநீர்… சென்னையில் போக்குவரத்து நெரிசல்..!!

சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது.

நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால், புதன் பிற்பகல் இது தீவிர புயலாக மாறி ஆக்ரோஷமாக கரையை கடக்கும். சென்னையில் தற்போது வரை 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

Categories

Tech |