சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர்.
இதையடுத்து அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை மாநகராட்சியில் போர்க் கால அடிப்படையில் பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ரிப்பன் மாளிகையில் 24 மணிநேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்புக் கொண்டு பாதிப்புகள் குறித்த புகார்களை அளிக்கலாம் மற்றும் உதவிகளை கோரலாம். தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் 163 தங்குமிடங்களும், உணவு, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்திதர தயாராக இருக்கிறது.
மேலும் மக்கள் பாதிக்காத வண்ணம் பணிகளை துரிதப்படுத்தவேண்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. @MMageshkumaar, முதன்மை செயலாளர் திரு. @GSBediIAS அவர்கள் மற்றும் அதிகாரிகள். pic.twitter.com/aQme74qiOP
— Priya (@PriyarajanDMK) November 1, 2022
இதனிடையில் சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் களபணிகளை நேரில் ஒருங்கிணைத்து வருகின்றனர். மழை நீர் வடிகால் இல்லாத சிலபகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கிறது. அப்பகுதிகளில் மோட்டார் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை பெய்ய துவங்கியது முதல் இரவுப் பகலாக சென்னை முழுதும் 19,500 பணியாளர்கள் சீரமைப்பு மற்றும் மீட்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று பேசினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது “2015ம் ஆண்டு, மழை வெள்ளத்துக்கு பிறகும் ஆட்சியில் இருந்தவர்கள் வெள்ளதடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இப்போது முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், நிரந்தர தீர்வை அளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தான் பல்வேறு பகுதிகளில் இன்று மழைநீர் தேங்கவில்லை. மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போர்க் கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறினார்.