Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… “புகார் கொடுக்க வந்த பெண்ணிற்கு போலீசாரால் நேர்ந்த கொடுமை”…!!

ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் காவல் அதிகாரி ஜெனரல் ஹவாசிங் குமாரியாவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் வரதட்சணை கொடுமை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,பின்னர் இந்த வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது அப்பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்பதாகவும், அதற்கு இவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கணவன் வீட்டார் சித்திரவதை செய்ததாக கூறி புகார் கொடுக்க வந்துள்ளார். அந்த பெண்ணை காவல் அதிகாரி மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை அறையில் அடைத்து பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |