டெல்லி ஆசாத்பூர் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான அனுஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அதிகாரி அனுஜ்த்திற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால் இதனை இளம் பெண்ணிடம் இருந்து அவர் மறைத்துள்ளார். இந்நிலையில் அஜித்திற்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அனுஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். தன்னை திருமணம் செய்யவில்லையென்றால் உண்மையை பொதுவெளியில் உடைத்து விடுவேன் என்றும் அந்த பெண்ணிடம் மிரட்டி உள்ளார்.
இருப்பினும் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்காததால் அனுஜ் வரை கொலை செய்ய கூலிப்படையை அணுகி உள்ளார். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அந்த பெண் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மாலை 6 மணிக்கு இருவர் உள்ளே நுழைந்தனர். அப்போது ஒருவர் பெண்ணே பிடித்துக் கொண்ட நிலையில் மற்றொருவர் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை திட்டத்தில் துர்கா மற்றும் சுமித் என்ற இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் அனுஜ் செல்போன் ஆதாரங்கள் மூலம் 6 மணி நேரத்தில் டெல்லி போலீசார் அனுஜ், துர்கா, பங்கஜ், பவுடி மற்றும் சுமித் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் மோனு என்ற குற்றவாளி மட்டும் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.