Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. “கன்று குட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்”…. வீடியோ எடுத்து வெளியிடபட்ட அவலம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பெண் கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு நபர்கள் சாலை ஓரத்தில் அப்பாவியாக படுத்திருந்த பெண் கன்று குட்டி ஒன்றை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கன்று குட்டி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 20லிருந்து 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூரமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பலர் பேரணியாக சென்று குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Categories

Tech |