கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு மக்கள் வந்து குளித்து மகிழ்கின்றார்கள். இந்த சூழலில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கின்றனர். மேலும் நீர்வரத்தை பொறுத்து தடை நீக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Categories
“கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு…!!!!!
