தமிழுக்கு அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருவது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் தன்னை சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதிமுகவிற்கு சங்கடத்தை கொடுப்பதற்காகவே இந்த விவரத்தை பேரவையில் விவாதிக்கிறார்கள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது எப்படி சட்டப்பேரவையி விவாதிக்க முடியும்? இது விதிமீறல் என்று கூறியுள்ளார்.