செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நேற்றைக்கு ஒரு போராட்டம் நடந்தது கம்யூனிஸ்டுகள் தான்… ஓய்வு பெற்றவர் வெறும் கையோடு போறான் என்று பார்த்தீர்களா சமூக வலைதளங்களில், அது எல்லாம் விவாதத்தில் செய்ய மாட்டீர்கள் இருந்தாலும் நான் சொல்கிறேன், உங்களுக்கு என்றைக்காவது புத்தி வந்து நடத்தினால் நடத்துவீர்கள். என்ன சொன்னார்கள் ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் அந்த ஓய்வூதிய பணம் அந்த நிமிடத்திலே வாங்கி வீட்டிற்கு செல்வார்கள் என்று. நடந்திருக்கிறதா ? அதுவும் நடக்கவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே அதையும் கொண்டு வரவில்லை, ஆகவே அவர்கள் தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத இந்த விடியா அரசு. ஏனென்றால் ஒவ்வொரு ஊருக்காக போய் ஸ்டாலின் வந்து டிரம்மை வைத்து அதில் பெட்டிஷன் வாங்கினார். அப்போது என்னை சொன்னார் 100 நாட்களில் சரியாகும். நிவர்த்தி செய்வோம் என்று, ஒன்றாவது செய்துள்ளார்கள்? ஆக இது செயல்படாத, ஊழல் அரசு.
ஏன் என்று சொன்னால் நீங்கள் பொங்கல் தொகுப்பிலே ஊழல் செய்த அதே அனிதா டெக்ஸ்கார்ட்டுக்கு திருப்பி காண்ட்ராக்ட் கொடுக்கிறதா இருந்தது. அண்ணாமலை அதை கொஞ்சம் விட்டு பிடித்திருந்தால் வகையாக மாட்டிருப்பார்கள். இப்ப வந்து அனிதா டெக்ஸ்கார்ட்டு கொடுக்கவில்லை.
சமீபத்தில் கமலஹாசன் போய் ஸ்டாலினை பார்த்தார்கள் என்னவென்று தெரியுமா ? இந்த அனிதா டெக்ஸ்கார்ட்டு சந்திரசேகர் மக்கள் நீதி மையத்தில் பொருளாளர். இதைப் பற்றி ஊழலை ஒழிக்கும் கமலஹாசன்பேசிருப்பாரா? இல்லை, இதை பேச மாட்டார் ஏனென்றால் சரியாக போகுதுல. அதன் மூலமா அதனால் மொத்தத்தில் ஊழல் கூட்டம் ஆட்சியில் இருக்கிறது.