Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொஞ்சம் புத்தி சொல்லுங்க பா அவங்களுக்கு”… பாமக தலைமைக்கு அட்வைஸ் பண்ண திருமாவளவன்…!!!!

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் பாமக தலைவர்களே வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளதாக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவித்ததாவது: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆளுமை வாய்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான குறிப்பிட்ட ஆறு விருதுகளை தேர்வு செய்து, அதில் 2021 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். இதனால் அவரை நேரில் சந்தித்து விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தோம்.

மேலும் பாமக எந்த சமூகத்திற்கு பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ? அந்த சமூகம் பொதுவெளியில் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். தலைவர்களே இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள். இதனால் சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஜெய்பீம் பட விவகாரத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நடிகர் சூர்யா அறிவித்த பிறகும், பாமக தலைமை தன் தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்” என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |