பேருந்தில் சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து ஒரு காட்டுயானை பஸ்சில் ஏற முயன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை உமா சங்கர் சிங் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் டாடா பேருந்தின் கதவு மிகசிறிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக யானையால் அதில் ஏற முடியவில்லை என தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் பேருந்து ஒன்றை காட்டுயானை தாக்க முற்படும் காட்சிகளானது இடம்பெற்றுள்ளது.
टाटा की बस के दरवाज़े इतने छोटे हैं कि ‘बड़ी सवारी’ चढ़ ही नहीं पायी! 😅
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) October 22, 2022
தன் தும்பிக்கையால் ரோட்டில் சென்ற பேருந்தை அது தாக்க முற்படுகிறது. இதனால் பேருந்து மெதுவாக செல்கிறது. அதன்பின் கதவை நோக்கி சென்ற யானை அதை முட்டுகிறது. இதன் காரணமாக யானை கதவை திறக்க முயற்சி செய்வதுபோல் தோன்றுகிறது. இருப்பினும் வீடியோ முடிவில் மெதுவாக நகர்ந்து சென்ற பேருந்தை விட்டு, விட்டு யாருக்கும் தீங்கு எதுவும் செய்யாமல் அந்த காட்டுயானை விலகி செல்கிறது.