கடல் பரப்பில் மிதந்து கொண்டிருந்த கண்ணிவெடிகளை ருமேனியா கடற்படையினர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
உக்ரேன் ராணுவப் படையினரால் ரஷ்ய போர்க் கப்பல்களை தகர்ப்பதற்காக கருங்கடலில் கண்ணிவெடிகள் மிதக்க விட்டுள்ளனர். இந்த கண்ணி வெடிகள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு ருமேனியா நாட்டை அடைந்துள்ளது. இந்நிலையில் கரையில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்த இந்த கண்ணி வெடிகளை மீனவர் ஒருவர் கவனித்து ருமேனியா கடல் படையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதனை அடுத்து இந்த கண்ணி வெடிகளை கடற்படையினர் கடலிலேயே வைத்து செயலிழக்க செய்தனர். இதேபோல் துருக்கி நாட்டில் இரண்டு கண்ணிவெடிகள் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்தது. அதனையும் அந்நாட்டு கடற்படையினர் செயலிழக்க செய்தனர்.