தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் ஆத்திரம் வரும். ஏனெனில் மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல்வேறு பறவைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டது. பல பேருக்கு நிழல்தரும் மரம் இரக்கமின்றி நொடியில் வெட்டப்பட்டது. அந்த வீடியோவில், பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக இருந்த ஒரு பெரிய மரத்தை சிலர் ஜேசிபி வாயிலாக வெட்டி வீழ்த்தியுள்ளனர்.
அவ்வாறு மரம் வெட்டப்பட்டபோது அவற்றில் பல பறவைகள் இருந்தது. மரத்தில் கூடுகட்டி பறவைகள் தங்கியிருந்தது. இதற்கிடையில் மரம் விழுந்ததால் அதிலிருந்த பறவைகள் மரத்தோடு சாய்ந்து சாலையில் விழுந்து காயமடைந்து உயிரை இழந்தது. ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Everybody need a house. How cruel we can become. Unknown location. pic.twitter.com/vV1dpM1xij
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) September 2, 2022
அனைவருக்குமே வீடு வேண்டும். ஆனால் நாங்கள் எவ்வளவு கொடூரமாக மாறுகிறோம்” எனக் கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வி.கே. பாடி எனும் ஊரில் அரங்கேறியுள்ளது. அதாவது சாலை விரிவாக்கப்பணி நடந்து வருவதால், சாலையோரத்திலுள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். அப்போதுதான் பறவைகள் தங்கிருந்த மரத்தையும் வேரோடு சாய்த்துள்ளனர்.