திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் ஓட்டி வந்தது பலிஜா பண்டிகை பகுதியில் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.