Categories
பல்சுவை

கொஞ்சம் கூட பயமில்லை!…. முதலையிடம் கையை கொடுத்து மாட்டிய நபர்…. மிரள வைக்கும் வீடியோ…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. வீடியோவில் ஒரு நபர் முதலையின் முன் அமருகிறார். பின் அந்நபர் முதலை வாயில் குச்சி ஒன்றை விட்டு ஆழம் பார்க்கிறார்.

மேலும் பயமில்லாமல் அதன் தாடையில் தன் கையை வைக்கிறார். முதலில் அந்த முதலை எதுவும் செய்யாமல் இருந்தாலும், பின் திடீரென அந்நபரின் கையை தன் வாயால் முழுமையாக கவ்வி பிடித்தது. இதனால் கடும் போராட்டத்திற்கு பின் எப்படியோ அவர் தன் கையை முதலையிடமிருந்து விடுவித்துக் கொண்டார். எனினும் அதற்குள் அவருடைய ரத்தம் தரையில் சிந்தி விடுவதை வீடியோவில் காண முடிகிறது. அதனை தொடர்ந்து அந்த நபர் உடனே அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Earth Reels (@earth.reel)

Categories

Tech |