கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கிறது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே இருப்பதால் உலகின் பல நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் கோவை விமானம் நிலையத்தில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அவிநாசி ரோட்டில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தினை மாட்டிக்கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்திருக்கிறார்.
சித்ரா பகுதியிலிருந்து ஹோப்ஸ் காலேஜ் வரை சுமார் 3 கி.மீ தூரம் அவிநாசி சாலையில் வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் பொதுமக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வாகனங்கள் அதிகமாக போகும் பரபரப்பான அவிநாசி சாலையில் ஓடும் பேருந்தில் பின் புறமாக வெளிநாட்டவர் ஸ்கேட்டிங் செய்தார். ஆபத்தை உணராது வெளிநாட்டவர் செய்த இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.