Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக்பைகள், அரசால் தடைசெய்யப்பட்ட நானோவகை பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் சோதனையின் போது சில பேர் பிளாஸ்டிக் பைகளை மறைக்க முயற்சிசெய்துள்ளனர். எனினும் சோதனையின்போது சுமார் ரூபாய்.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திடீர் சோதனை பற்றி அதிகாரிகள் கூறியதாவது “ஏற்கனவே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அளிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என மாநகராட்சியிலுள்ள கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் சில கடைஉரிமையாளர்கள் அதை விற்பனை செய்துதான் வருகின்றனர். தற்போது அவர்கள் கடைகளிலிருந்து பைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதங்களும் விதிக்கப்படுகிறது. ஆகவே பிளாஸ்டிக்பைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |