கோடநாடு கொலை விவகாரத்தில் மீண்டும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுகிறது. சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசிய அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோடநாடு கொலை வழக்கில் திமுக சதி செய்வதாக கூறினார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கோடநாடு விவகாரத்தில் கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது. அரசியல் காழ்புணர்ச்சியால் முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது; அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது.
கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம்; இது தான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை. கொரோனா 2வது அலையில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டது இனிப்பு; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஒன்றிய அரசு பெயரில் ஆரம்பித்து நிறைய தேவையற்றதை பேசியது, பாஜக தொண்டர்களை கைது செய்ததுதான் கசப்பு, காரம்” என்று தெரிவித்துள்ளார்.