Categories
தேசிய செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ….!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகாவில் எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம் அம்மாப்பள்ளி உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொசஸ்தலை ஆற்றில் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருப்பதோடு வெளியகரம், மீடியம், சாமந்த வாடா, சொரக்கா பேட்டை, தில்கால் பட்டறை  தரைப் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |