Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொங்கு மண்டலத்தை வசமாக்கும் திமுக” மொத்த கண்ட்ரோலையும் கையில் எடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!!

திமுகவில் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் யார் என்பது தான் தற்போது பலரது எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது. கொங்கு மண்டலம் என்பது திமுக கட்சியின் பிரஸ்டீஜ் ஆகவே கருதப்படுகிறது. ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றினாலும் கோவையில் உள்ள 10 இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 1 இடத்தை பாஜகவும் தான் கைப்பற்றியது. கொங்கு மண்டலத்தில் மட்டும் திமுக தோல்வியை சந்தித்து வருவதை முதல்வர் ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனால்தான் கொங்கு மண்டலத்தில் நம்பிக்கையான ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைத்தார். அப்போதுதான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது நம்பிக்கை வைத்து கோவை மாவட்ட செயலாளராக முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கோவை மாவட்ட செயலாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்ட செயலாளர் அறிவிப்புகள் வந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ஆதரவாளர்களை கோவையில் நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு என அமைப்பு ரீதியாக 5 மாவட்டங்கள் இருந்தது. ஆனால் 10 மாவட்டங்களுக்கு அமைப்பு ரீதியாக 5 மாவட்டங்கள் இருந்தால் சரி வராது என்று செந்தில் பாலாஜி நினைத்துள்ளார்.

இதனால் அதை மூன்றாக மாற்றுவதற்கு தலைமை இடத்தில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் கடந்த 18-ஆம் தேதி கோவை அமைப்பு ரீதியாக மூன்றாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் கோவை வடக்கு மாவட்டத்திற்கு ரவியும், தெற்கு மாவட்டத்திற்கு முருகேசனும், கோவை மாநகர் மாவட்டத்திற்கு கார்த்திக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர வேறு யாரும் வேறு யாரும்‌ வேட்பு மனு தாக்கல் செய்யாததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவு இருப்பதால்தான் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லு கட்டுபவர்களை சரி செய்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற்று விடும் எனவும் திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Categories

Tech |