செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்பூர் பிரியாணி கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையில் ஆஃபர் முறையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நாட்டுக் கோழி ஒரு கிலோ கோழி எடை ஒன்றரை கிலோ பிரியாணி வழங்கப்படும். அதுபோல பிராய்லர் கோழி எடைக்கு எடை பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் விளையக்கூடிய காய்கறிகளான பச்சை மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் முருங்கை போன்ற காய்கறிகளை பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டு அதன் இன்றைய மதிப்புக்கு ஏற்றார்போல் பிரியாணி வழங்கப்படுகின்றது. அதனால் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது.