தவறான அறிக்கை வழங்கிய ஸ்கேன் செண்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்மணிக்கு கை, கால்கள் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கர்ப்ப காலத்தில் போது ஸ்கேன் மையத்தில் குழந்தை நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். அந்தப் பெண்மணிக்கு 3 முறை ஸ்கேன் செய்த போதும் தவறான அறிக்கையை கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி நுகர்வோர் நீதிமன்றத்தில் ஸ்கேன் சென்டர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தவறான அறிக்கையை வழங்கிய ஸ்கேன் சென்டருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.