Categories
சினிமா

“கை அசைத்த அஜித் குமார்”…. உற்சாகத்தில் நடனமாடிய ரசிகர்கள்….. போலீசார் தடியடி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ‘ஏகே 61’ என் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டிய பைக் ரேஸ், போட்டோகிராபி போன்றவற்றில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் கார் மூலம் திருச்சி சென்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் காலை ரைபிள் கிளப்புக்கு சென்று பங்கேற்றார். இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற பின்னர் ரைபிள் கிளப் மாடியில் இருந்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனை எடுத்து அவர்களை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். அவரை பார்க்கத் திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பியும், நடனம் ஆடியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Categories

Tech |