Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கைரேகை பதியவில்லை…. ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரேஷன் கடை ஊழியரை மிரட்டிய குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் பொதுமக்களின் கைரேகைகளை எந்திரத்தில் பதிவு செய்து உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான குருநாதன் என்பவரது கைரேகை எந்திரத்தில் பதிவாகவில்லை.

இதனால் சிறிது நேரம் காத்திருந்து உணவு பொருட்களை வாங்கி செல்லுமாறு குருநாதனிடம் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அப்போது கோபமடைந்த குருநாதன் ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரவி சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குருநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |