Categories
அரசியல்

“கையெழுத்து இல்லாமல் வாக்கு பதிவு…!!” அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதா தேர்தல் ஆணையம்…??

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 17ஆவது வார்டு பகுதியில் வாக்குப்பதிவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை முதல் சுமார் 640 வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் வாக்குச்சாவடிக்கு வந்த சுமார் 160 வேட்பாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போடாமல் வாக்குப் பதிவு செய்ததாக வாக்கு பதிவு செய்ததாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து திமுகவினர் தேர்தல் அதிகாரிகளை சுற்றிவளைத்து அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இது குறித்து அறிந்த திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார் விரைந்து வந்து இரண்டு கட்சியினரும் சமாதானம் செய்து வைத்தார். இந்த பிரச்சனை காரணமாக திருமங்கலம் 17வது வார்டு பகுதியில் வாக்கு பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Categories

Tech |