Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கையில் மண்ணெண்ணையோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரு சில அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு விதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசின் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம்  தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 274 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் பின் இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நேர்முக உதவியாளர் சுரேஷ் உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். அந்த வகையில் மூதாட்டி ஒருவரின் கையில் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதில் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸர் நடத்தி விசாரணையில் அவர் சங்கராபுரம் வள்ளலார் கோவில் தெருவை சேர்ந்த புஷ்பா என்பதும் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம் தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளும் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளித்து தற்கொலை செய்ய வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

Categories

Tech |