தலையில் கிரீடம், கையில் சூலம், கழுத்தில் நகைகள் என முழு அம்மன் போல் அன்னபூரணி வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
நான்தான் கடவுள் என்ற சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் அன்னபூரணி. இவர் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஒரு சாமியார் மடத்தை நடத்தி வருகின்றார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பொன்னாத்தூர் ராஜ தோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு வழங்கி வருகின்றார். தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என்று கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றார்.
மேலும் யூட்யூபில் ஆன்மீக சொற்பொழிவும் நடத்தி வருகிறார். சமீபத்தில் ஆடி மாசம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் பக்தர்களுக்கு அவர் அம்மன் வேதத்தில் காட்சியளித்தார். அதாவது கையில் சூலம், கிரீடம் அணிந்து, கழுத்து நிறைந்த நகை அணிந்து அம்மன் போல அலங்கரித்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது.