திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய ரோடு, மணப்பாறை கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுமக்களிடம் பிஸ்கட், டீ போன்ற வச்சி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் கம்பி அல்லது குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பார்த்ததும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
இதனால் சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் இயக்குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனா, செவிலியர் அனிதா ஆகியோர் அந்த வாலிபரை மீட்டு மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.