Categories
ஆன்மிகம் இந்து

கையில் கட்டும் கயிற்றின் நிறங்களின் சிறப்பு..!!

கோவிலில் தரும் பல நிற கயிறுகளை நாம் அனைவரும் கையில் கட்டுவது பழக்கம், ஆனால் எந்த நிறம் என்ன சிறப்பை கொடுக்கும், என்று பார்ப்போம்..!

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறத்தில் கட்டுவோம். இது தீய சக்திகளை நீக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே உள்ளது.

கையில்  கட்டுவதன் மூலம் நமக்கு பலவகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

நூலினால் ஆன காப்புக்கயிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்புக்கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.

சிவப்பு நிறத்தில் கயிறு நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கருப்பு நிற கயிற்றை கட்டுவதால் அவற்றின் பார்வையில் இருந்து விடுபடலாம். இதை குழந்தைகளின் இடுப்பில் கட்டினால் காத்து, கருப்பு அண்டாது.

ஆரஞ்சு மற்றும் காவி நிற கயிறு இந்த கயிற்றினை மணிக்கட்டில் கட்டுவதால் புகழ் அதிகாரம் சேரும். இத்தகைய காப்பு கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது ரொம்ப சிறப்பு.

காசிக்கயிறு இந்த வகை கயிறு முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வ டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள் இதுவும் ஒருவகையில் தீய சக்தியிடம் இருந்து நம்மை காப்பதாகும்.

Categories

Tech |