ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
#AnnaattheMotionPoster
Arangam mulukka therikka therikka!https://t.co/qgiTJtxDr5@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @prakashraaj @immancomposer @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali— Sun Pictures (@sunpictures) September 10, 2021
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கையில் அருவாவுடன் பைக்கில் ரஜினி கெத்தாக வருவது போன்ற மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .