Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கைப்பேசி கொண்டு வரக்கூடாது…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

ஓட்டு  எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குள் கைபேசி கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்  வானியம்பாடியில் இருக்கும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஓட்டு  எண்ணிக்கை இன்று நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  ஒட்டு  எண்ணும் மையங்களில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் காலை 8 மணி முதல் ஓட்டு  எண்ணிக்கை நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் ஓட்டு  எண்ணும் மையங்களில் 800 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அதனையடுத்து 286 நபர்கள் ஓட்டு  எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு ஓட்டு  எண்ணும் மையங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு வேண்டிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தனித்தனியான வழிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஓட்டு  எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் தங்களது கைப்பேசிகளை கொண்டு வரக் கூடாது எனவும் மீறினால் பரிமுதல் செய்யப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் ஆம்பூர் பகுதியில் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு போலியான தங்க காசுகளை கொடுத்து வாக்குகளை சேகரித்துள்ளாகவும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த  பேட்டியின் போது காவல்துறை அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் என பலர் அருகில் இருந்துள்ளனர்.

Categories

Tech |