தமிழ்நாடு கைப்பந்து கழகம் சார்பாக மாநில இளைஞர் கைப்பந்து போட்டியானது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 9-ம் தேதி வரை விருதுநகரில் நடைபெற இருக்கிறது. இவற்றில் பங்கேற்கும் திருச்சி ஆண்கள், பெண்கள் அணிகள் தேர்வு கருமண்டபத்திலுள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் நடந்தது.
அப்போது ஆண்கள் அணிக்கான தேர்வில் 50 வீரர்களும், பெண்கள் அணிக்கான தேர்வில் 20 வீராங்கனைகளும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வீரர்-வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் கைப்பந்துகழக தலைவரான தங்க பிச்சையப்பா, செயலாளரான கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் அணியை தேர்வுசெய்தனர்.