2021-2022 ஆம் ஆண்டின் கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் போது கைத்தறித்துறை அமைச்சரால் கைத்தறி ஆணையகரத்தில் நெசவாளர் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கத்திலும் நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு மற்றும் கூலி உயர்வு போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உதவியாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை இயக்குனர் முகமை அதிகாரி குறைதீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறைதீர்க்கும் மையம், கைத்தறி ஆணையகரம், சென்னை 14 என்ற முகவரி இட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும். அதே சமயம் நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் இணையதள முகவரி ஆன https:/gdp.tn.gov.in/dhI என்ற இணையதளத்தில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம். அதனைப் போலவே மின்னஞ்சல் முகவரி [email protected] என்பதில் புகார் அளிக்கலாம்.
மேலும் நெசவாளர் குறைதீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். தொலைபேசி எண் 044-25340518 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.