Categories
சினிமா தமிழ் சினிமா

‘கைதி’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?… வெளியான தகவல்…!!!

கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் லோகேஷ் கனகராஜ் எழுதியதாக கூறப்பட்டது .

Kaithi Movie Images, HD Wallpapers | Karthi Looks from Kaithi

இதன்பின் கார்த்தி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கைதி பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதனால் தனக்கு வருத்தம் இல்லை என்றும் ஏனென்றால் கார்த்தி சிறப்பாக நடித்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |