நடிகர் சிரஞ்சீவி தன் தம்பி மகளான நிஹாரிகாவை குழந்தையாக இருக்கும் போது கையில் தூக்கி வைத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி . தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஆரச்சர்யா என்ற திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகாவுக்கு உதய்ப்பூரில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் நிஹாரிகாவுக்கு நடிகர் சிரஞ்சீவி சீர்வரிசையாக 1. 5 கோடி நகை ஆபரணங்கள் மற்றும் பல லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள் கொடுத்துள்ளாராம்.
మా చేతిలో పెరిగిన మా చిన్నారి నిహారికని, చైతన్య చేతిలో పెడుతున్న ఈ శుభతరుణంలో, ముందస్తుగా, కాబోయే దంపతులకు నా శుభాకాంక్షలు , ఆశీస్సులు. God bless you! #NisChayWedding @IamNiharikaK pic.twitter.com/eLLPcZcYZV
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 8, 2020
இந்நிலையில் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் நிஹாரிகா குழந்தையாக இருக்கும்போது கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘எங்கள் கைகளில் வளர்ந்த எங்கள் சிறிய நிஹரிகாவை சைதன்யாவின் கைகளில் ஒப்படைக்கும் இந்த நல்ல தருணத்தில் தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.