கே.ஜி.எப் திரைப்படத்தின் 3ஆம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த்நீல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2ஆம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வது போன்று அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதன் காரணமாக 3ஆம் பாகம் முழுதும் கடலில் தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பது போல் கூறியிருப்பார். கடலில் நடக்கும் சாகசகதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்நிலையில் நாயகன் யஷிற்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளுக்குள் போட்டி நடக்கிறதாம்.
இதனால் தயாரிப்பு தரப்பான கொம்பேலா கம்பெனிக்கு தங்கள் சார்பில் தூதுவர்களை அனுப்பி வருவதாகவும், படத்தில் ஹீரோயினாகவோ (அல்லது) முக்கிய கதாபாத்திரங்களிலோ நடிக்க வேண்டும் என்பதில் முன்னணி கதாநாயகிகள் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில பேர் இயக்குனர் பிரசாந்த் நீலை தொடர்புகொண்டு தங்களுக்கும் கதாபாத்திரங்களை எழுதச் சொல்லி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக படக்குழு யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பத்தில் இருக்கின்றனர்.