இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப்-2 படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
https://twitter.com/prashanth_neel/status/1412375411061784584
மேலும் இந்த படம் வருகிற ஜூலை-16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டருடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ‘திரையரங்கம் முழுவதும் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும் போதுதான் மான்ஸ்டர் வருவார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என குறிப்பிடபட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.