Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா… வெளியான சூப்பர் தகவல்…!!!

கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை நார்தன் இயக்க இருக்கிறார்.

Only Yash™ on Twitter: "#KGF Unseen Still ? #Yash #Tamanna @TheNameIsYash  @tamannaahspeaks #TeamOnlyYash… "

இயக்குனர் நார்தன் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி ஆகியோர் நடிப்பில் வெளியான ‘மப்டி’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். தற்போது நார்தன் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கே.ஜி.எப் படத்தில் தமன்னா நடிகர் யாஷுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |