Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு…. பொதுமக்களுக்கு அடுத்த டென்ஷன்…. வெளியான அறிவிப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஎன்ஜி கேஸ்-ன் விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான மகாநகர் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வால் 8,00,000பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 3,00,000 பேர் கார் கார் ஓட்டிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் மும்பையில் இப்போது 1 கிலோ சிஎன்ஜி கேஸ் 63.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் குழாய் வாயிலாக விநியோகிக்கப்படும் பிஎன்ஜி கேஸ் விலை ஒரு யூனிட்டிற்கு 63.50 ரூபாயாக இருக்கிறது. கடந்த 3 மாதங்களில் 4-வது முறையாக சிஎன்ஜி கேஸ்-ன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் மும்பையில் சிஎன்ஜி கேஸ்-ன் விலை 16 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வையடுத்து குறைந்தபட்ச கட்டணத்தை 5 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று டாக்ஸி சங்கங்களும், 2 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி டாக்ஸி, ஆட்டோவில் பயணம் செய்யும் பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |